நெல்லையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது; இடி, மின்னலுடன் திடீர் கோடை மழை: கடும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி

நெல்லை: நெல்லையில் நேற்று இடி, மின்னலுடன் திடீர் கோடை மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. திடீர் மழை காரணமாக கடுமையாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாகும். மே மாதம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வாட்டி வதைக்கும். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும். நெல்லை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே கடும் கோடை வெயில் நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அனல் காற்று வீசியது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்லவே அஞ்சினர். நெல்லையில் தினமும் வெப்பம் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வந்தது.

நெல்லையில் நேற்றும் பகலில் வழக்கம் போல் வெப்பம் தகித்தது. பிற்பகல் 2.30 மணிக்கு மேல் லேசான குளிர்ந்த காற்று வீசியது. மாலை 3 மணிக்கு பின்னர் பலத்த இடி, மின்னலுடன் கோடை மழை கொட்டியது. நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை, புதிய பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், தச்சநல்லூர், தியாகராஜநகர், நெல்லை டவுன், சீதபற்பநல்லூர், முக்கூடல், மானூர், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, நாங்குநேரியில் 4 மிமீ, பாளையங்கோட்டையில் 12 மிமீ, நெல்லையில் 18 மிமீ மழை பதிவானது. மழை காரணமாக நெல்ைல வண்ணார்பேட்ைட, பாளை. மார்க்கெட், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக நெல்லை வண்ணார்பேட்டை முதல் முருகன்குறிச்சி வரை சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் ேநற்று மாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. திடீர் கோடை மழையால் கடந்த சில நாட்களாக நிலவிய வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Related posts

பூரன் – ராகுல் அதிரடி ஆட்டம் மும்பையை வீழ்த்தியது லக்னோ

பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவால் வீட்டில் போலீஸ் விசாரணை: பொய் புகார்: வீடியோ ஆதாரம் வெளியிட்டது ஆம்ஆத்மி

சட்டத்தை தவறாக பயன்படுத்தும் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு