போக்ஸ்வேகன் டிகான்

போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், மேம்படுத்தப்பட்ட டிகான் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய சுற்றுச்சூழல் விதிகளுக்கு ஏற்ப இது உருவாக்கப்பட்டுள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.34.7 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முன்பு இருந்த விலையை விட சுமார் ரூ.50,000 அதிகம். இதுதவிர, டூயல் டோன் ஸ்டோர்ம் கிரே இன்டீரியர்கள், வயர்லஸ் சார்ஜர், பார்க் அசிஸ்ட், அடாஸ் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.

மேலும், பாதுகாப்பு அம்சங்களாக பின்புற சீட்கள் உட்பட அனைத்து சீட்களிலும் சீட் பெல்ட் போடாவிட்டால் எச்சரிக்கும் அமைப்பு, 6 ஏர் பேக்குகள், ஏபிஎஸ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிரைவர் அலர்ட் சிஸ்டம் போன்றவை இடம் பெற்றுள்ளன. மற்றபடி, தொழில்நுட்ப ரீதியாக இன்ஜினில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இதில் உள்ள 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின், அதிகபட்சமாக 190 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

Related posts

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள தங்களது கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவிப்பு

ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு