வைரலோ வைரல்

விண்ணில் தெரிந்த விண்வெளி ஆய்வுக் கூடம்!

சென்னையில் கடந்த மே 11ம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை வெறும் கண்களால் பார்க்க முடிந்தது. சர்வதேச விண்வெளி நிலையம், நமது கிரகத்தைச் சுற்றி வரும் பெரிய விண்கலம். விண்வெளி வீரர்கள் இதில் தங்கி ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை சென்னையில் இருந்து வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று நாசா அறிவித்திருந்தது. அதன்படி இரவு 7.09 மணி முதல் வெறும் கண்களால் 7 நிமிடங்களுக்கு வானில் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.சர்வதேச விண்வெளி மையம் மிகவும் பிரகாசமாக இருக்கும் காரணத்தால், இதை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் வானத்தை ஆவலுடன் பார்த்தபடி இருந்தனர். ஏற்கனவே அறிவித்தபடி 7.09 மணிக்கு மேல் வெளிச்சப் புள்ளியாகவும், சற்று நீண்ட கோடாகவும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை பார்க்க முடிந்தது. சென்னையின் பல இடங்களில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் கடந்து செல்வதை மக்கள் பார்த்து ரசித்தனர். இந்த வீடியோக்களும், புகைப்படங்களும்தான் தற்போது வரை டிரெண்டில் உள்ளன.

உலகின் விலையுயர்ந்த காவல்துறை வாகனம்!

உலகின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் காவல்துறை வாகனத்தை மியாமி காவல்துறை அறிமுகப்படுத்தி இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியாமி கடற்கரை காவல்துறை உலகின் முதல் ‘‘ரோல்ஸ் ராய்ஸ்” காவல் காரை அவர்கள் அறிமுகப்படுத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில், அவர்களது வாகனக் குழுமத்தில் இந்த உயர்தர காரை அவர்கள் பெருமிதத்துடன் காண்பிக்கின்றனர். இது தொடர்பாக தங்கள் சமூக வலைத்தள பதிவில், சேவைக்கான தங்கள் அர்ப் பணிப்பு பற்றி பெருமைப்படுகிறது. இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரின் ஆரம்ப விலையே ரூ.6.75 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மியாமி காவல்துறையினருக்கு இந்தக் காரை கொடுத்திருப்பதன் மூலம் உலகையே அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியுள்ளது.

 

Related posts

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தினசரி 400 பேர் வரை செல்ல ஏற்பாடு

பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!