திருமணம் உள்ளிட்ட சமூக நிகழ்ச்சிகளுக்கு காவல் நிலையத்திலேயே அனுமதி அளிக்க வேண்டும் : சு.வெங்கடேசன்

மதுரை : திருமணம் உள்ளிட்ட சமூக நிகழ்ச்சிகளுக்கு காவல்நிலையத்திலேயே அனுமதி அளிக்க வேண்டும் என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை எம்.பி. சு வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில்,”தேர்தல் காலம் என்பதால் திருமணங்கள் உள்ளிட்ட குடும்ப, சமூக நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடைப்பதில் பெரும் அலைச்சலும், கால விரயமும் ஏற்படுகிறது.தேர்தலுக்கான சுவிதா செயலியில் இதற்கான வசதியும் செய்து தரப்படவில்லை. ஆகவே இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலேயே அனுமதி அளிக்க வேண்டுகிறேன்”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்