வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்!

சென்னை: அம்பேத்கர் பிறந்தநாளை அறிவு திருநாளாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தும் திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம். மின்னணு வாக்கு எந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த விசிக தொடர்ந்து வலியுறுத்தும். பாசிச சக்திகளை அகற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளுக்கும் வி.சி.க. துணை நிற்கும். பாசிச சக்திகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் விசிக வலிமையான குரல் எழுப்பும். இந்துத்துவ திணிப்பால் சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்துத்துவ சக்தியால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க தேவையான முயற்சிகளை வி.சி.க மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்.

 

Related posts

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்