உதகை மலை ரயில் தடம் புரண்டது..!!

உதகை: உதகை அருகே எருமைகள் மீது மோதியதால் மலை ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் உதகை ரயில் நிலையம் அருகே வந்தபோது தண்டவாளத்தில் நடந்து சென்ற எருமைகள் மீது மோதியது. மலை ரயில் மோதி ஒரு எருமை உயிரிழந்த நிலையில் மற்றொரு எருமை படுகாயமடைந்து. 200க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் மலை ரயிலின் ஒரு பெட்டி மட்டும் தடம் புரண்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மலை ரயில் தடம் புரண்ட இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related posts

சாம்பியன் பட்டம் வென்றார் கார்லஸ் அல்காரஸ்

பரந்தூர் -நிலம் எடுப்பிற்கான அனுமதி ஆணை வெளியீடு

ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்கிறார் மோடி