ஒன்றிய அரசு வழங்கும் திட்டத்தில் மோடி படம் இல்லாவிட்டால் நிதியுதவியை நிறுத்துவோம்: அமைச்சர் கிரிராஜ்சிங் பேட்டி

திருமலை: திருப்பதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வந்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி அளித்தால், அதை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் அரசு பயன்படுத்திக் கொண்டு வருகிறது. அனைத்தையும் தாங்களே செய்ததை போல விளம்பரப்படுத்துகிறார்கள். ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு உள்ள ஒவ்வொரு திட்டத்திலும் மோடியின் புகைப்படம் இடம்பெற வேண்டும். இல்லை என்றால் நிதியுதவியை நிறுத்துவோம். இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் மாநில மக்களை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு ஏமாற்றும். மாநிலத்தின் பெரும்பாலான வளர்ச்சி ஒன்றிய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மேகதாது அணை பற்றி பேச்சு நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அமைச்சர் சோமண்ணாவுக்கு ராமதாஸ் கண்டனம்..!!

மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு ரயில் சிக்னலை மீறி சென்றதால்தான் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசு