இன்டர்போல் உதவியுடன் யுஏஇயில் இருந்து கொலை குற்றவாளி இந்தியாவுக்கு நாடு கடத்தல்

புதுடெல்லி: இன்டர்போல் அமைப்பால் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட கொலை குற்றவாளி ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து நேற்று இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். நரேந்திர சிங் என்பவர் மீது ஸ்வரன் சிங் என்ற நபரை வெட்டி கொன்றதாக அரியானா போலீசாரால் கடந்த 1994ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 1998ல் விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நரேந்திர சிங்குக்கு, பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றம் கடந்த 2009ல் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்ய சென்றனர். ஆனால் அவர் மாயமாகி விட்டார். இதையடுத்து நரேந்திர சிங்குக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சில் தலைமறைவாக இருந்த நரேந்திர சிங் நேற்று இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

 

Related posts

இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல் முடிவை தெளிவாக்கியுள்ளது: ராகுல் காந்தி பேட்டி

இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி