குற்றவியல் சட்டங்களை சர்வாதிகாரத்துக்காக மாற்ற முயற்சி: பாஜ மீது கபில் சிபல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: சர்வாதிகார ஆட்சி நடத்தவே குற்றவியல் சட்டங்களை மாற்றியமைக்க அரசு முயற்சிக்கிறது என கபில் சிபல் குற்றம் சாட்டினார். முன்னாள் ஒன்றிய சட்ட அமைச்சர் கபில் சிபல் எம்பி நேற்று கூறுகையில், ‘‘பிரிட்டிஷ் கால சட்டங்களை மாற்ற வேண்டும் என ஒன்றிய தேஜ கூட்டணி அரசு சொல்கிறது. சர்வாதிகாரம் படைக்கவே இதுபோன்ற சட்டங்களை கொண்டுவர திட்டமிடுகின்றனர்.

அந்த சட்டங்கள் மூலம் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவே இது கொண்டுவரப்படுகிறது. எனவே, நீதிபதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குற்றவியல் சட்டங்களை மாற்றுவது நாட்டின் எதிர்காலத்துக்கு ஆபத்து. எனவே, இந்த சட்டங்களை மாற்றும் முடிவை கைவிட வேண்டும்’’ என்றார்.

Related posts

தருமபுரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் லேசான மழைக்கு வாய்ப்பு

ஆன்லைனில் ஒரு வாழ்க்கை.. Offline-ல் ஒரு வாழ்க்கை: Gen Z தலைமுறை குறித்த ஆய்வில் தகவல்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு