பெரியபாளையம் அருகே சவுடு மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்: ஓட்டுநர்களுக்கு போலீஸ் வலை

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே உரிய அரசு அனுமதியின்றி சவுடு மண் கடத்திவந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய லாரி ஓட்டுனர்களை தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த வேம்பேடு பகுதியில் உரிய அரசு அனுமதியின்றி லாரிகளில் சவுடு மண் ஏற்றி வருவதாக, திருவள்ளூர் துணை வட்டாட்சியர் சண்முகசுந்தரத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் பெரியபாளையம் போலீசார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள், வேம்பேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சவுடு மண் ஏற்றி வந்த 2 லாரிகளை மடக்கி பிடித்தனர். இந்நிலையில் போலீசாரை கண்டதும் லாரி ஓட்டுநர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து போலீசார், லாரிகளை சோதனை செய்ததில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக சவுடு மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனால், சவுடு மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருவள்ளூர் வட்டாட்சியர் சண்முகசுந்தரம் அளித்த புகாரின்பேரில், பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுனர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

மின் கம்பி அறுந்து 7 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

அமித்ஷா நாளை மதுரை வருகை

தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை கண்டித்ததால் பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை: 17 வயது சிறுவன் வெறிச்செயல்