வடமாநிலங்களில் லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தால் மத்தியப் பிரதேசத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர்கள் சிக்கித் தவிப்பு

மராட்டியம்: வடமாநிலங்களில் லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தால் மத்தியப் பிரதேசத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். சாஹர் அருகே 50 கி.மீ. தூரத்தில் இருபுறமும் காடுகள் சூழ்ந்த இடத்தில் சிக்கித் தவிப்பதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் தகவல் தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேசம் மட்டுமின்றி மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களிலும் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளது. சரக்கு போக்குவரத்து முடங்கியதால் தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஓட்டுநர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

Related posts

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் தொடங்கியது!!

ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

அய்யாகண்ணு வீட்டுக் காவலில் சிறைவைப்பு!!