திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் சிக்னல் பெட்டியை உடைக்க முயன்ற வாலிபர் கைது: சதி வேலையா என விசாரணை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் இயங்குவதற்கான சிக்னல்கள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இங்குள்ள ரயில்வே சிக்னலில் திடீரென அதிர்வு ஏற்பட்டது. இதனை ரயில் நிலையத்தில் உள்ள கணினியில் கண்டறியப்பட்டது. ரயில் நிலைய மேலாளர் தகவலின்படி ரயில்வே போலீசார் சென்று பார்த்தபோது, சிக்னல் விளக்கின் கீழே உள்ள பெட்டியை ஒரு வாலிபர் கல்லால் உடைப்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, திருப்பத்தூர் பீரான்லைன் பகுதியை சேர்ந்த கோகுல்(30) என்பதும், போதையில் இருப்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். சிக்னல் பெட்டியை உடைக்க விடாமல் தடுத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படை டிவிஷன் செக்யூரிட்டி கமிஷனர் சவ்ரோகுமார், இருப்பு பாதை டிஎஸ்பி பெரியசாமி, எஸ்பி செந்தில்குமார் ஆகியோர் கைதான கோகுலிடம் ரயில் விபத்துக்கு சதி செய்தாரா என விசாரணை நடத்தினர்.

Related posts

மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து சிறுவன் பலி: 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி சாலையில் வேன் கவிழ்ந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

5 நாட்கள் கொடைக்கானல் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்