திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று 67,294 பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களில் 22,765 பேர் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.

உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று இரவு எண்ணப்பட்டது. அதில், ₹2.94 கோடி காணிக்கையாக கிடைத்தது. இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் 4 அறைகள் நிரம்பியுள்ளன. நேர ஒதுக்கீடு டிக்கெட் இன்றி வரும் பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணிநேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

Related posts

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் கடந்த 5 மாதங்களில் 2,058 முகாம்களில் மக்களிடம் பெறப்பட்ட 8.74 லட்சம் மனுக்கள் மீது ஒரே மாதத்தில் தீர்வு கண்டு சாதனை: தமிழக அரசு அறிவிப்பு

மம்தா குறித்து சர்ச்சை கருத்து முன்னாள் நீதிபதிக்கு 24 மணி நேரம் தடை: தேர்தல் கமிஷன் அதிரடி

ஆந்திர மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது கலவரம் ஏற்பட்டால் தடுக்க துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தி போலீசார் ஒத்திகை: பீதியில் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்