18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று பக்தர்கள் 18 மணி ேநரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை, அரசு விடுமுறை, பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் தற்போது பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல் இன்று காலையும் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் நேற்று ஏழுமலையான் கோயிலில் 81,212 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 41,690 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். மேலும் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று கணக்கிடப்பட்டது. இதில் ₹2.88 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

Related posts

கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை

நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

மீன்பிடிக்க நீர் நிலைகளில் தண்ணீர் இறைக்க கூடாது கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காது