தோட்டியோடு ஜங்ஷன் பகுதியில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது : வாகன சோதனையில் சிக்கினார்

திங்கள்சந்தை: கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் எஸ்பி சுந்தரவதனத்தின் உத்தரவின் பேரில், தக்கலை மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கனகராஜன் தலைமையிலான போலீசார், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து தோட்டியோடு ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த பைக்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டு இருந்தனர். இந்த சோதனையின் போது ஒரு பைக்கில் ஒரு கிலோ கஞ்சா இருந்ததை கண்டு அதிர்ச்சி பிடித்தனர். தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்த கஞ்சாவை போலீசார் இரணியலில் உள்ள தக்கலை மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து கஞ்சாவை கடத்தி வந்த வாலிபர் குறித்து கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர்.

இந்த விசாரணையில் கஞ்சாவை பைக்கில் கடத்தி வந்தது நாகர்கோவில் வடசேரி ஓட்டுபிரைதெருவை சேர்ந்த விக்னேஷ் (23) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடந்த விசாரணையில் கேரளாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த முக்கிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து விக்னேஷை போலீசார் கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த கஞ்சா கடத்தலில் தொடர்புடைய வடசேரி மரிச்சினிவிளை, வாத்தியார்விளை ஆகிய பகுதிகளை சேர்ந்த 2 இளம் சிறுவர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழ்நாடு தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை

பிக்சல் செல்போன் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சந்திக்க திட்டம்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் ஒன்றிய, கேரளா அரசு: வரும் 28ல் புதிய அணை குறித்து பரிசீலனை