தூத்துக்குடி அருகே தியானத்திற்கு வந்த சென்னை ஆசிரியையுடன் உல்லாசம் தியான மைய ஊழியர் மீது வழக்கு: தவறாக நடக்க முயன்றதாக பாதிரியார் மீதும் புகார்

புதுக்கோட்டை: சென்னை ஆசிரியையை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து ரூ.5 லட்சத்தை அபகரித்த தூத்துக்குடி தியான மைய ஊழியர் மீதும், இதுபற்றி புகார் செய்தபோது தவறாக நடக்க முயன்ற பாதிரியார் மீதும் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட ஸ்டீபன் என்பவரது மகள் கேத்தரின் (32). இவர், திருமணமாகி சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. கேத்தரினுக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் மன அழுத்ததில் இருந்த கேத்தரின், சொந்த ஊரான தூத்துக்குடி வந்துள்ளார். இங்கு மன ஆறுதலுக்காக தூத்துக்குடி அடுத்த புதுக்கோட்டை பகுதியில் உள்ள தியான இல்லத்திற்கு வந்து சென்றுள்ளார்.

அப்போது தியான இல்ல பாதிரியார் மைக்கேல் என்கிற மகிழன்(62) மூலம் மைய உதவியாளர் ஜோஸ்வா (எ) இசக்கி அறிமுகமாகி உள்ளார். கேத்தரினுக்கு ஆறுதல் கூறி வந்த ஜோஸ்வா, அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததாகவும், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் எனக்கூறி கேத்தரினிடம் இருந்து ரூ.5 லட்சத்தையும் ஜோஸ்வா பெற்றுள்ளார். இந்நிலையில் கேத்தரினை ஜோஸ்வா திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து போதகர் மகிழனிடம் கூறியபோது அவரும் கேத்தரினிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தன்னை ஏமாற்றிய ஜோஸ்வா மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த போதகர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கேத்தரின் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பேரில் இளம்பெண் கேத்தரினை ஏமாற்றி, அவரிடம் இருந்து பணத்தை பறித்ததாக, தியான மைய ஊழியர் ஜோஸ்வா மற்றும் பாதிரியார் மகிழன் மீது 294(பி), 420, 417, 506 (1) மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பாலியல் புகார் வழக்கில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது

சொல்லிட்டாங்க…

தென்மாவட்டத்தில் தலைகாட்டிய சேலத்துக்காரர் தப்பித்தோம், பிழைத்தோம் என காரில் பறந்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா