திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடலோர பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக திருவாரூர் மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு போலீசார் இன்று அதிகாலை முத்துப்பேட்டை அருகே உள்ள அலையாத்தி காட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.

உடனடியாக போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அலையாத்தி காட்டில் 10 மூட்டை கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் முத்துப்பேட்டை சேர்ந்த முருகானந்தம், மகேந்திரன், கோவிலூரை சேர்ந்த சசிகுமார் என்பதும் தெரியவந்தது. அவர்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் இதன் மொத்த எடை 300 கிலோ என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

Related posts

கோடை விடுமுறையை ஒட்டி தெற்கு ரயில்வே சார்பில் 19 சிறப்பு ரயில்கள் இயக்கம்

மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.38,000 கோடி; ஒன்றிய அரசு ஒதுக்கியதோ ரூ.285 கோடி.! தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜ அரசு

டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் பதில்மனு!