திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் தேரோட்டம்; பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்..!!

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தையொட்டி 7ம் நாளான இன்று வெகு விமர்சியாக நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சித்திரமாத பிரம்மோற்சவமானது கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளன்று தர்மாலிபீடத்தில் அருள்பாலித்த பெருமாள், புன்னைமர வாகனத்தில் வீதியுலா வந்தார்.

தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் பரமபத நாதன் திருக்கோலத்தில் சேஷவாகன வீதி உலாவும், தொடர்ந்து கருடசேவை, சூரிய பிரபை, சந்திர பிரபை என நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கு சேவையும் நடைபெற்றது. 6ம் நாளான நேற்று சொர்ண அபிஷேகம் நடைபெற்று, பார்த்தசாரதி பெருமாள் யானை வாகனத்தில் வீதியுலா வந்து அருள் பாலித்தார். சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது 7ம் நாளான இன்றைய தினம் நடைபெற்றது.

இன்று அதிகாலை 3:30 மணியளவில் பெருமாள், கோயிலில் இருந்து வெளியே வந்து திருத்தேரில் எழுந்தருளினார். சரியாக காலை 7 மணியளவில் தேரோட்டமானது பக்தர்கள் வடம்பிடிக்க நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் கோயிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் பக்தி பரவசத்துடன், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Related posts

மே 18-ல் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

மின்வாரியத்தில் பணியாற்றும் கேங் மேன்களுக்கு எலக்ட்ரிக் டிடெக்டர் வழங்க முடிவு: மின்சார வாரியம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் 14 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழை வழங்கினார் உள்துறைச் செயலர் அஜய் பல்லா