திருமங்கலம் பகுதியில் துணிகரம்: வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் 18 சவரன், ரூ.1 லட்சம் துணிகர கொள்ளை

அண்ணாநகர்: திருமங்கலம் பகுதியில் வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் 18 சவரன் தங்க நகை, ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் (29). சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை ராமசுப்பிரமணியன் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் பீரோவை திறந்துள்ளார். சத்தம் கேட்டு ராமசுப்பிரமணியனின் மனைவி எழுந்து பார்த்தபோது, வாலிபர் ஒருவர் பீரோவை திறந்துகொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து திருடன் திருடன் என கூச்சல் போட்டுள்ளார்.

இதனால் சுதாரிக்கொண்ட வாலிபர் பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை சுருட்டிக்கொண்டு மதில்சுவர்மீது எகிறிகுதித்து தப்பியுள்ளார்.இதுகுறித்து ராமசுப்பிரமணியன் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, பீரோ லாக்கரை உடைத்து 18 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கப்பணம் கொள்ளைபோனது தெரியவந்தது.

மேலும் ராமசுப்பிரமணியனின் பக்கத்து வீடு வழியாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, பக்கத்து வீட்டு மதில்சுவர் வழியாக வாலிபர் வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடிவிட்டு மறுபடியும் தப்பிசெல்லும் காட்சி பதிவாகியுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வருமானவரித்துறை அதிகாரி வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு