குடியரசு தின விழாவில் பங்கேற்க அமெரிக்க அதிபர் பைடன் இந்தியா வர வாய்ப்பில்லை

புதுடெல்லி: குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் இந்தியா வர வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடக்க உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்ள வர வேண்டுமென பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்தார். ஆனால் இதைப் பற்றி ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், அதிபர் பைடன் ஜனவரியில் இந்திய பயணத்தை திட்டமிடவில்லை என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், வரும் ஜனவரியில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட் உச்சி மாநாடு இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

Related posts

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது