மக்களவை தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டம் மார்ச் 3ம் தேதி மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூடுகிறது

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் வரும் மார்ச் 3ம் தேதி ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் நடைபெறும் கடைசி கூட்டமாகும் இது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அட்டவணை வெளியிடுவதற்கு முன்னர் ஒன்றிய அமைச்சரவையின் கூட்டம் வரும் 3ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டம் சாணக்யபுரியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் நடக்கும் இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2014 தேர்தலுக்கு மார்ச் 5 ல் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. 9 கட்டமாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மே 16ம் தேதி எண்ணப்பட்டன. 2019ல்,7 கட்ட மக்களவை தேர்தல் அட்டவணை மார்ச் 10ம் தேதி வௌியிடப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் மே 23ம் தேதி எண்ணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தங்கம் விலை பவுனுக்கு 120 குறைந்தது

தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: ஜெயக்குமார்

அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் 20ம் தேதி ஆலோசனை: சென்னையில் நடைபெறுகிறது