சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். போர்க்கலைகளான வாள் பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை ஆகிய கலைகளை கற்று தன் இளம் வயதில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு போர்களில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. போர்களமிட்ட தீரன் சின்னமலையை போற்றும் விதமாக சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீரன் சின்னமலையின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அமைச்சர்கள் முத்துசாமி, மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, சாமிநாதன், சக்கரபாணி, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தற்போது சுதந்திர காற்று சுவாசித்து கொண்டிருக்கும் நாமும் தியாக செம்மலாக வாழ்ந்த ஆகச்சிறந்த வீரனான தீரன் சின்னமலைக்கு நமது மரியாதையான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.

Related posts

வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.79 கோடி சொத்து சுகாதாரத்துறை அதிகாரி பழனி வீட்டில் அதிரடி சோதனை: சொத்து ஆவணங்கள் பறிமுதல்

நிர்வாக ரீதியாக பள்ளிகள் தேர்ச்சி சதவீதம்

தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் 3 நாட்களில் சவரன் ரூ.640 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி