முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மிட்சுபிஷி நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்

சென்னை: சென்னை அருகே ஏ.சி. தொழிற்சாலை தொடங்க ஜப்பானின் மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.1800 கோடி முதலீடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து. கும்மிடிப்பூண்டி தாலுகா பெருவயல் கிராமத்தில் ஏ.சி. தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. 100% அந்நிய நேரடி முதலீட்டின் மூலம் இந்தியாவில் மிட்சுபிஷியின் முதல் ஏ.சி. ஆலை அமைக்கப்பட உள்ளது. பெருவயலில் 2025-க்குள் 52.4 ஏக்கரில் அமையும் ஏ.சி. தொழிற்சாலை மூலம் 2004 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

Related posts

சென்னையில் கரிம உமிழ்வினை குறைக்க நடவடிக்கை காலநிலை முதலீட்டு வாய்ப்புகள் கண்டறியும் கருத்து பட்டறை: சுப்ரியா சாகு தலைமையில் நடந்தது

கோமா நிலையில் உள்ள கணவரை கவனிக்க கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு ஐகோர்ட் அனுமதி

ஒருவழிப்பாதையில் சென்றால் அபராதம் உறுதி: பேரிகார்டில் பொருத்தப்பட்ட 10 ஏஎன்பிஆர் கேமரா அறிமுகம்