‘டெட்’ தேர்ச்சி சான்றிதழ் நகல் இ-சேவை மையத்தில் பெறலாம்

நாகர்கோவில்: ஆசிரியர் தகுதி தேர்வு 2012, 2013, 2017 மற்றும் 2019க்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1, தாள் 2 சான்றிதழ்களின் நகல் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த சான்றிதழ்கள் தேர்வர்களுக்கு இணையதளத்தின் TNeGA வழியாக வழங்குவதற்கு வாரிய தலைவர் அனுமதி அளித்திருந்தார். இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநர் அறிவிப்பில், டெட் தேர்வு சான்றிதழ்கள் நகல் பெறுவதற்கு இ-சேவை மையத்தை அணுக வேண்டும். விண்ணப்ப தாரர்களிடம் கட்டண தொகை ரூ.100 (ஆசிரியர் தேர்வு வாரிய வங்கி கணக்கு) மற்றும் இ-சேவை நிறுவனத்திற்கான சேவை கட்டணம் ரூ.60 சேர்த்து ரூ.160ஐ இ-சேவை மையத்தில் செலுத்தி சான்றிதழ் நகலை பெற்றுக்கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஈரான் அதிபர் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்: சையத் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்தவர் கைது.. இந்தியாவில் சர்வதேச மாஃபியா கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்!!

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த புகார்; சிபிசிஐடி வழக்குப்பதிவு!