வாலிபரிடம் செல்போன் பறிப்பு

பூந்தமல்லி: பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் மணி பாலன் (22). இவர் மதுரவாயல் அடுத்த வானகரம், ரத்னா நகர் பகுதியில் வாடகை வீட்டில் தனது நண்பர்களுடன் தங்கியுள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இவர் போரூரில் உள்ள தனியார் ஆன்லைன் டியூஷன் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாண்டிச்சேரிக்கு சென்ற இவர், நேற்று முன்தினம் இரவு போரூர் சுங்கச்சாவடியில் இறங்கி தனது அறைக்குச் செல்வதற்காக நண்பர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு பேசிக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரது செல்போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு தகர்க்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு நீட் தேர்வு முறையை ரத்து செய்யவேண்டும்: ஒன்றிய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை மாபெரும் வெற்றி பெறச் செய்வோம்: முத்தரசன்