தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 2 – 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் ஏப்.21, 22, 24 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி முதல் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Related posts

தமிழ்நாட்டில் 18 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது

மக்களவை தேர்தல் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது: வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்