தமிழ்நாட்டில் வாக்குகளை பெறுவதற்காக கச்சத்தீவை வைத்து பிரதமர் மோடி சந்தர்பவாத அரசியல் : இலங்கை ஊடகங்கள் தாக்கு

கொழும்பு: கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக இலங்கை ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. 1974ம் ஆண்டில் கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா விட்டு கொடுத்தது தொடர்பாக பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சித்து இருந்தார். இது போல் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இலங்கையின் பிரபல ஆங்கில நாளிதழான டெய்லி மிரர், தமிழ்நாட்டில் வாக்குகளை பெறுவதற்காக கச்சத்தீவை வைத்து பிரதமர் மோடி சந்தர்பவாத அரசியல் செய்கிறார் என்று விமர்சித்துள்ளது. மேலும் அவருக்கு உறுதுணையாக அறிவார்ந்த திறனை கைவிட்டு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கருத்து தெரிவித்து இருப்பது வருத்தம் அளிப்பதாக டெய்லி மிரர் தனது தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

இதே போல் இந்திய தலைவர்களின் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது என்றும் இத்தகைய கருத்துக்கள் தேவையற்றது என்றும் இலங்கையின் டெய்லி பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நட்பு உள்ள அண்டை நாட்டுடன் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அந்த பத்திரிகை விமர்சித்துள்ளது. இதனிடையே கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடியின் கருத்து தொடர்பாக இந்தியாவிடம் இலங்கை அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என அந்நாட்டு மீனவ அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

Related posts

நாடாளுமன்ற தேர்தலில பாஜக படுதோல்வி அடையும்: டி.ஆர்.பாலு பேட்டி

இடைக்கால ஜாமீன் கேட்டு இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் ஜூன் 5ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி சிறப்பு நீதிமன்றம்

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் வெற்றி பெறும்: கார்கே திட்ட வட்டம்