தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்ட விதிகளை பின்பற்ற ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் உரிய சட்டவிதிகளை வட்டாட்சியர்கள் பின்பற்ற வேண்டும் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தேவகோட்டையை சேர்ந்த மதியாரி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. வட்டாட்சியர்கள் உரிய சட்டவிதிகளை முறையாக பின்பற்றுவதில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் உரிய சட்டவிதிகளை பின்பற்றவில்லை எனில் வரும் காலங்களில் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் விதிமுறைகளை பின்பற்றாத தேவகோட்டை வட்டாட்சியருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை

மெக்கா: வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 19 பேர் பலி

சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில் சேவை