தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இலங்கை படையால் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், அவர்களது உடைமைகள் பறிக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இலங்கை கடற்படையினர் மட்டுமல்லாது அந்நாட்டு கடற்கொள்ளையர்களாலும் மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த நாற்பது வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஒன்றிய அரசு இதுவரை மீனவர்கள் பிரச்சினையில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண்பதற்கு முயற்சிக்கவில்லை. தமிழ்நாடு மீனவர்களின் நலன்களை பாதுகாப்பது ஒன்றிய அரசின் கடமை” என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

Related posts

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்