தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 8 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மைய தலைவர் பேட்டி

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 8 நாட்களுக்கு மழை நீடிக்கும் வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலும் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அக்.1-ம் தேதி முதல் தற்போது வரை 25 செ.மீ. வரை வடகிழக்கு பருவமழை பதிவாகி உள்ளது. இன்று வரை சராசரியான 30 செ.மீ.க்கு பதில் 25 செ.மீ. மட்டுமே மழை பதிவாகியுள்ளதாக வானிலை மைய தென் மண்டல தலைவர் கூறியுள்ளார்.

 

Related posts

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை