தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மார்ச் 1-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 2.90 லட்சம் மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர்ந்தனர்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை எண்ணிக்கை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள், உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும். வரும் கல்வி ஆண்டில் (2024-2025) அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணியை மார்ச் 1-ம் தேதி தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியிருந்தார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதுடன், மதிய உணவுடன், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், 2024-25ம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 5 லட்சம் மாணவ, மாணவியரை சேர்க்க பள்ளிக்கல்வித்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதன்படி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கடந்த மார்ச் 1ம் தேதி சென்னையில் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு விறுவிறுப்பாக நடந்தது. அந்த வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 940 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும் போது 5 லட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

மே-15: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை