கர்நாடக பா.ஜ மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தம்: வேடிக்கை பார்த்த அண்ணாமலை


பெங்களூரு: பாரதிய ஜனதா தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தமிழ் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. இதனால் எரிச்சல் அடைந்த பாஜ தலைவர் ஈஸ்வரப்பா அதை உடனே நிறுத்தசொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக சட்டபேரவை தேர்தலில் தமிழர்களின் ஆதரவு பெறும் வகையில் ஷிவமொக்கா மாநகரில் நேற்று அம்மாவட்டத்தில் வாழும் தமிழர்களை ஓரிடத்தில் அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கர்நாடக முன்னாள் துணைமுதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, தமிழ்நாடு பாஜ தலைவர் கே.அண்ணாமலை உள்பட கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களை சேர்ந்த பாஜ தலைவர்கள் இருந்தனர்.

கூட்டம் தொடங்குவதற்கு முன் கர்நாடக மாநில நாட்டுப்பண் இசைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசின் மாநில மொழி பாடலான நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்’’ என்ற பாடல் ஒலிப்பரப்பானது. உடனடியாக பாடலை நிறுத்தும்படி கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தார். அதன் பின் கர்நாடக மாநில மொழி பாடல் இசைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு எந்த சலனமும் இல்லாமல் பா,ஜ தமிழ்நாடு பிரிவு தலைவரான அண்ணாமலை அமைதிகாத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கெஜ்ரிவால் முற்றுகையிடப் போவதாக அறிவித்ததால் டெல்லி பாஜ ஆபீஸ் முன் போலீஸ் குவிப்பு: 144 தடை உத்தரவு; ஆம்ஆத்மி தொண்டர்கள் கைது

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லியில் பா.ஜ.க. அலுவலகத்தை ஆம் ஆத்மி கட்சி முற்றுகை