தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு முடிவு இன்று காலை வெளியாகிறது: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்

சென்னை: தமிழ்நாட்டில், பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவுகளை இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு, கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 7,600 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவியர் எழுதினர். பிளஸ்2 தேர்வுகள் ஏப்ரல் 3ம் தேதி முடிந்த பிறகு, 10ம் தேதியில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணி 70 மையங்களில் தொடங்கியதுடன், 24ம் தேதியுடன் முடிக்க திட்டமிடப்பட்டது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மே 5ம் தேதி வெளியிட, ஏற்கெனவே தேர்வுத் துறை முடிவு செய்திருந்த நிலையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தாமதம் காரணமாக வெளியிட முடியாது என்பதால் மே 7ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், மே 7ம் தேதி, நீட் தேர்வு நடப்பதால் அதற்கு முன்னதாக பிளஸ்2 தேர்வு முடிவை வெளியிட்டால் நீட் தேர்வு எழுதுவதற்கு ஏற்ற மனநிலை மாணவர்களுக்கு அமையாது. அதனால், முதல்வரிடம் கலந்து பேசி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை பின்னர் அறிவிப்போம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.

அதைத் தொடர்ந்து தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பில், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்ம் தேதி காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை அமைச்சர் வெளியிடுகிறார். மாணவ மாணவியர் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.gov..in ஆகிய இணைய தள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த இணைய தளங்களில் மாணவ-மாணவியர் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்தால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்டவர் உயிரிழப்பு..!!