தாசில்தார் வீட்டில் ரூ.2 கோடி பறிமுதல்: தெலங்கானாவில் விஜிலென்ஸ் அதிரடி

திருமலை: தெலங்கானாவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில், தாசில்தார் வீட்டில் விஜிலென்ஸ் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரிகுடா தாசில்தார் மகேந்தர். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து, மகேந்தர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் வீட்டில் இருந்த ஒரு இரும்பு டிரங்க் பெட்டியில் கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு எண்ணப்பட்டதில் ரூ.2 கோடி இருந்தது. ஆனால் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் ரூ.2 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டில் இருந்து தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related posts

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது