தொங்கு பாலம் அறுந்து 135 பேர் பலி பாதிக்கப்பட்டோருக்கு வாழ்நாள் ஓய்வூதியம், வேலை தர உத்தரவு: குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி

அகமதாபாத்: குஜராத் மாநிலம் மோர்பியில் ஆங்கிலேயர் காலத்து தொங்கு பாலம் கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி திடீரென அறுந்து விழுந்தது. இதில், பாலத்தை சுற்றிப் பார்க்க வந்திருந்த 135 பேர் ஆற்றில் விழுந்து பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து தொடர்பான வழக்கு குஜராத் உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி சுனில் அகர்வால் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, ‘‘இந்த விவகாரத்தில் ஒருமுறை இழப்பீடு என்பது நிச்சயம் போதுமானதாக இருக்காது. பாலம் அறுந்த விபத்தில் கணவனை இழந்து விதவையானவர்களுக்கு வேலை கொடுங்கள். வேலைக்கு வர முடியாதவர்களுக்கு மாதாமாதம் இழப்பீடு தொகை கொடுங்கள். அவர்களை வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்ள வேண்டும். மகனை இழந்த ஆதரவற்ற பெற்றோருக்கு வாழ்நாள் ஓய்வூதியம் வழங்குங்கள். இந்த விபத்து பலரது வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது. எனவே வாழ்நாள் முழுவதும் செலவு செய்தாக வேண்டும்’’ என சம்மந்தப்பட்ட ஒரேவா நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

Related posts

நீட் மோசடி: பீகாரில் நீட் தேர்வுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மாணவர்களிடம் ரூ.32 லட்சம் பெற்று கொண்டு வினாத்தாளை கசியவிட்டதாக தரகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்

சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு முட்டியதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம்

புராதன சின்னங்களை சுற்றி பார்க்க மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதி