வாச்சாத்தி வழக்கில் மேலும் 5 பேருக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.திரிவேதி தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் கேட்ட நீதிபதிகள், ‘வாச்சாத்தி தொடர்பான பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்குவதாகும், சரணடையாமல் இருப்பவர்களுக்கு ஆறு வாரம் அவகாசம் வழங்குவதாக தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆறு வாரம் ஒத்தி வைத்தார். மேலும் இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து விரிவாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர். இந்த வழக்கில் வனத்துறை அதிகாரி உட்பட 4 பேருக்கு உச்ச நீதிமன்றம் முன்னதாக ஜாமீன் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

 

Related posts

நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்

தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் மேடக் நகரில் பாஜக பேரணியில் இருதரப்பு மோதல்