வீடியோ கான்பரன்சிங் விசாரணை ஐகோர்ட்டுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: சண்டிகரை சேர்ந்த சர்வேஷ் மாத்தூர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் வீடியோ கான்பரன்ஸ் முறையிலான விசாரணையை நிறுத்தி விட்டது. இதனால், மனுதாரர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். அந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்,நீதிபதிகள், பர்திவாலா,மனோஜ் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அதை விசாரித்த தலைமை நீதிபதி, ‘‘நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை எழுப்பியுள்ளீர்கள். நாங்கள் இதை பற்றி நீண்ட நாள் யோசித்து வந்தோம். வீடியோ கான்பரன்ஸ் முறையிலான விசாரணையை நிறுத்திய உயர்நீதிமன்றங்களிடம் விளக்கம் கேட்கப்படும். அனைத்து உயர்நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களிடமும் கேட்போம்’’ என்றார். வீடியோ கான்பரன்ஸ் முறை செயல்படுகிறதா என்பது குறித்து பதில் மனுதாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றங்களின் பதிவாளர் ஜெனரல்கள்,தீர்ப்பாயங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கடந்த வாரம் பங்குகளின் விலை உயர்ந்ததால் 8 பெரிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3,28,116.58 கோடி உயர்ந்தது

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வாணியம்பாடி அருகே ஆசிரியை வீட்டில் 80 சவரன் நகைகள், ரூ.4.50 லட்சம் கொள்ளை