ஒன்றிய அரசின் உண்மை கண்டறியும் குழு (Fact Check Unit) தொடர்பான அரசாணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

டெல்லி : ஒன்றிய அரசின் உண்மை கண்டறியும் குழு (Fact Check Unit) தொடர்பான அரசாணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஒன்றிய அரசுக்கு எதிராக பரப்படும் தவறான தகல்களை கண்டறிந்து நீக்குவதற்காக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. அரசின் கொள்கைகள், முன்முயற்சிகள் மற்றும் திட்டங்கள் பற்றிய தவறான தகவல்களைத் தானாக முன்வந்து அல்லது புகார்கள் மூலமாக உண்மைச் சரிபார்ப்புப் குழு கண்டறியும்.

அரசாங்கத்தைப் பற்றிய தவறான தகவல்கள் உடனடியாக சரி செய்யப்படுவதை இந்த பிரிவு உறுதி செய்யும். இந்த நிலையில், ஒன்றிய அரசின் உண்மை சரிப்பார்ப்புக் குழு அமைக்கும் அரசாணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்டம் 2023-க்கு எதிரான வழக்கில், மும்பை உயர் நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும் வரை இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

சிறுகதை-உறவு முத்திரை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கு விற்பனை..!!

கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு; கோவிலாறு அணையை தூர்வார வேண்டும்: வத்திராயிருப்பு விவசாயிகள் கோரிக்கை