கோடை காலத்தில் வெயிலை சமாளிக்க சலூன் கடைகளில் அதிகரிக்கும் ‘சம்மர்’ கட்டிங்

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சலூன் கடைகளில் ‘சம்மர்’ கட்டிங் அதிகளவில் நடக்கிறது. குறிப்பாக இளைஞர்கள், சிறுவர்கள் சம்மர் கட்டிங் வெட்டிக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.தமிழகத்தில் கோடைகால வெயில் வாட்டி வதைக்கிறது. இளைஞர்கள் முடி திருத்தும் கடைகளில் பொதுவாக வி கட்டிங், டாப் நாட் ஸ்டைல், அண்டர் கட்டிங் போன்ற வடிவங்களில் முடி வெட்டி கொள்கின்றனர். கோடைகால சரும பிரச்னைகள், தலையில் முடி அதிகமாக இருந்தால் சூட்டு பிரச்னைகளை தவிர்க்க முதியோர் முதல் இளைஞர்கள் வரை சலூன் கடைகளை நோக்கி சம்மர் கட்டிங் வெட்ட செல்வது அதிகரித்திருப்பதாக சலூன் கடைக்காரர்கள் கூறுகின்றனர். கோடைகாலம் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது போலீஸ் கட்டிங் மற்றும் சம்மர் கட்டிங் தான். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முடி வெட்டுவோர் கூட கோடைகாலத்தில் 20 நாட்களுக்கு ஒரு முறை முடிதிருத்தம் செய்து கொள்கின்றனர். சிலர் ஒரு படி மேலே சென்று மொட்டை அடித்துக்கொள்கின்றனர்.

இதுதொடர்பாக சலூன்கடை உரிமையாளர் சத்யா கூறியதாவது: கோடைகாலத்தில் இளைஞர்கள் ‘சம்மர் கட்டிங்கில் தான் ஆர்வம்’ காட்டுகின்றனர். ஆஃபர் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களால் தொடங்கப்பட்டுள்ள சலூன் கடைகள், தற்போது இளைஞர்களை அதிகம் ஈர்த்து வருகிறது. இதனால், எங்களை போன்ற நடுத்தர சலூன்கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் தான் இருக்கிறது. கடந்த 5 வருடங்களாக புதிய புதிய அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களை கொண்ட சலூன் கடைகளில் தள்ளுபடி விற்பனை நடக்கிறது என்றார்.

மருத்துவர் தனலஷ்மி கூறியதாவது: சம்மர் கட்டிங் வெட்டுவதால் தலையில் ஈரம் தேங்காமல் விரைவில் உலர்ந்துவிடும். வியர்வை, அழுக்குகளை எளிதில் சுத்தம் செய்யலாம். நீண்ட முடிவைத்திருக்கும் இளைஞர்கள் பொடுகு, புண், தலையில் ஈரம் தங்குவதால் சைனஸ் பிரச்னைகளில் சிக்கி அவதிப்படுகின்றனர். ஆனால், சம்மர் கட் செய்வதால் தலையில் முடியின் அடர்த்தி குறைந்துவிடும். எனவே, தினமும் நீரில் தலைக்கு குளித்தாலும் முடி உடனடியாக உலர்ந்துவிடும், ஈரம் தங்காது. கோடைகாலங்களில் குழந்தைகளுக்கு 4 செ.மீ அளவிற்கு முடியை வைத்திருக்க வேண்டும் என்றார்.

Related posts

நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிசூடு நடத்திய வழக்கில் கைதானவர் தற்கொலை!

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம்

சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் விஐபி நுழைவாயிலில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கியது: விமானநிலைய அதிகாரிகள் ஆய்வு