கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு

சென்னை: கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் இறுதியில் ஆண்டு தேர்வுகள் முடிந்தன. இதனை தொடர்ந்து தற்போது கோடை விடுமுறையில் மாணவர்கள் உள்ளனர். ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

ஆனால், எந்த வருடமும் இல்லாத அளவுக்கு தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளதால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகலாம் என தகவல் வெளியான நிலையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர்; ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் அதே தேதியில் திறக்கப்படும். ஜூன் 1-ம் தேதி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை திறக்கப்படும். ஜூன் 5ஆம் தேதி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related posts

11 மணிநேரம் அச்சுறுத்திய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்: திருப்பத்தூரில் விடியவிடிய பரபரப்பு

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை வெளியீடு..!!

முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் வீட்டின் ஒருபகுதி இடிப்பு..!!