சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கினால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்..!!

சென்னை: சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களில் தண்ணீர் தேங்கினால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. தென்மாவட்டங்களில் காட்டாற்று ஓர சாலைகளில் பேருந்துகளை இயக்கும்போது கவனமாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நெல்லை தரைப்பாலத்தில் அரசுப் பேருந்து சிக்கியதை அடுத்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவுரை வழங்கியுள்ளது. பேருந்துகளில் ஒழுகுவது போன்ற புகார்கள் வந்தால் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த
ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

 

 

Related posts

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!