மாணவி காதலனின் தந்தை அடித்துக்கொலை: அதிமுக நிர்வாகி உள்பட 2 பேர் கைது

வாழப்பாடி: வாழப்பாடி அருகே கல்லூரி மாணவி காதல் விவகாரத்தில், காதலனின் தந்தை அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதிமுக நிர்வாகி உள்பட 2 பேரை கைது செய்த போலீசார், முன்னாள் பஞ்சாயத்து தலைவி உள்பட 2 பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தென்னம்பிள்ளையூரை சேர்ந்தவர் குணசேகரன் (50). இவரது மகன் பிரசாந்த்(26). பிஇ., பட்டதாரியான இவர், வேலை தேடிக்கொண்டு இருக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது 18 வயது மகள், தனியார் கல்லூரியில் பிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். உறவினர்கள் என்பதால், முருகேசன் மகளை பிரசாந்த் காதலித்துள்ளார். இது தெரியவரவே இரு தரப்பினருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு, காதல் விவகாரம் தொடர்பாக, அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்ேபாது முருகேசன், அவரது உறவினர்களான அதிமுக கிளை செயலாளர் சிவக்குமார், அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவி தமிழரசி மற்றும் முத்தம்மாள் ஆகியோர் சேர்ந்து, குணசேகரன் மற்றும் பிரசாந்த்தை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு குணசேகரன் நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து, ஏத்தாப்பூர் போலீசார், கொலை வழக்குப்பதிந்து, முருகேசன் மற்றும் சிவக்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், முத்தம்மாள், தமிழரசி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்