தென்கொரியாவை தூண்டிவிடும் அமெரிக்காவை அழித்து விடுவோம்: வடகொரியா பகிரங்க எச்சரிக்கை

சியோல்: வடகொரியா தென்கொரியா நாடுகளிடையேயான நீண்டநாள் மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல் உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. இதனிடையே அமெரிக்கா – தென்கொரியா நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி, தென்கொரியாவில் அமெரிக்காவின் குண்டு வீசும் விமானங்கள், அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் போன்ற சக்தி வாய்ந்த ராணுவ தளவாடங்கள் நிறுத்தி வைப்பு போன்றவை அதிகரித்துள்ளதால் வடகொரியா ஆத்திரமடைந்துள்ளது. இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், “தென்கொரியா எங்கள் முக்கியமான எதிரி. தென்கொரியாவை தூண்டும் நாடுகளை அழித்து விடுவோம்” என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கொள்கைக் கூட்டணிக்கு 40/40 தொகுதியிலும் வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்: அமைச்சர் உதயநிதி

இம்முறை எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையை பொதுமக்கள் வழங்கவில்லை: தேர்தல் முடிவுகள் குறித்து மல்லிகார்ஜுன கார்கே பதிவு

ஜெகன் மோகன் ரெட்டி ராஜினாமா