தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தற்போது தீவிரம் குறைந்துள்ள நிலையில், குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல காற்று சுழற்சி காரணமாக சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 160மிமீ மழை பெய்துள்ளது. நாலுமுக்கு 150மிமீ, மாஞ்சோலை 60மிமீ, பாபநாசம், கொள்ளிடம் 20மிமீ, தரங்கம்பாடி, சிதம்பரம், கொடசவாசல், அண்ணாமலை நகர், சேர்வலாறு அணை, பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, சீர்காழி, மயிலாடுதுறை, திருக்குவளை 10மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடுகாரணமாக கன்னியாகுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 2ம் தேதிக்கு பிறகு வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Related posts

இடைக்கால ஜாமின் பெற்ற கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார்

அட்சயத் திருதியையொட்டி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 3வது முறை உயர்வு

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு