தெற்கு குஜராத்தில் மூழ்கிய படகில் தவித்த 5 மீனவர்கள் மீட்பு: கடலோர காவல்படை அதிரடி

அகமதாபாத்: குஜராத்தில் விபத்தில் சிக்கி மூழ்கிய படகில் இருந்து 5 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பகுதிக்கு இந்திய மீன்பிடி படகு சென்றது. அந்த படகில் 5 மீனவர்கள் இருந்தனர். திடீரென மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதாக கடலோர காவல்படையின் தெற்கு குஜராத் டாமன் மற்றும் டையூ கடல்சார் மீட்பு துணை மையத்துக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து கடலோர காவல் படை மீட்புப் பிரிவு தளபதி கார்த்திகேயன் தலைமையிலான குழு, விபத்துக்குள்ளான படகை மீட்க விரைந்தது. சிறிது நேரத்தில் கடலோர காவல்படை கப்பல், விபத்து நடந்த இடத்தை அடைந்தது. அப்போது மீன்பிடி படகு பாதி தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தது. அதில் இருந்த மீனவர்களும் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தனர்.

கடலோர காவல்படையினரின் முயற்சியின் பலனாக, படகில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு, 5 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதன்பின் அந்த படகும் மீட்கப்பட்டது. இருந்தபோதும் படகின் 75% பகுதி நீரில் மூழ்கி இருந்ததால், படகை உடனடியாக கரைக்கு கொண்டு வர முடியவில்லை என்று கடலோர காவல்படை தெரிவித்தது.

Related posts

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியதாக தகவல்

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு