ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் மின் வசதி ஏற்படுத்தி தரப்படும்: ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு

டெல்லி: ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் மின் வசதி ஏற்படுத்தி தரப்படும் என ஒன்றிய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும்.

அப்போது உரையாற்றிய அவர்;
ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் மின் வசதி ஏற்படுத்தி தரப்படும். சோலார் மின் வசதி ஏற்படுத்தி மின் உற்பத்தி செய்யும் வீடுகளுக்கு 300 யூனிட்டுகள் இலவசமாக வழங்கப்படும். கிராமப்புறங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என நிதியமைச்சர் நிர்மலா அறிவித்துள்ளார்.

Related posts

விடுமுறை நாட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

நிசான் எக்ஸ் டிரையல்

தண்ணீரை வீணடித்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் : குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க டெல்லி அரசு அதிரடி!!