இன்ஜினியர், வக்கீல் ஆவதை காட்டிலும் சமூக ஊடக பிரபலமாக இருந்தால் நிறைய சம்பாதிக்கலாம்: பிரபல நடிகை கருத்து

மும்பை: பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி அளித்த பேட்டி ஒன்றில், ‘இன்றைய காலம் சமூக ஊடக பிரபலங்களின் காலமாகிவிட்டது. அவர்கள் திரைத்துறை நட்சத்திரங்களாக மாறி வருகின்றனர். அவர்களை சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்ஜினியர் ஆகவோ, வக்கீலாகவோ ஆகாமல், சமூக ஊடக பிரபலமாக இருந்தாலே நிறைய சம்பாதிக்கலாம் என்கின்றனர். உண்மையில் இப்போது அதுவொரு தொழிலாகிவிட்டது. மேலும் இந்த தொழிலில் நிறைய பணம் சம்பாதிக்க முடியும்.

ஒரு வீடியோவை சமூக ஊடங்களில் பதிவிடுகிறார்கள் என்றால், அந்த பதிவானது மற்றவர்களை ஈர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். பொதுவெளியில் மக்களிடம் செய்திகளை ஊடகங்கள் கொண்டு சேர்ப்பது போல், சமூக ஊடக பிரபலங்களும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்’ என்றார். நோரா ஃபதேஹின் பாதையானது சமூக ஊடக பிரபலங்களை போன்று சுதந்திரமானதாக உள்ளது. கடந்த 2020 முதல் எந்த வெற்றிப் படத்திலும் அவர் நடிக்கவில்லை என்றாலும், சில படங்களில் குத்தாட்ட பாடலுக்கு நடித்து பிரபலமாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வெறுப்பு, மோதல் நீங்கி சகோதரத்துவம், அமைதி நிலவட்டும்: தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து

இடைத்தேர்தல் புறக்கணிப்பு சரியல்ல ‘ஒன்றிணைவோம் வாருங்கள்’ அதிமுகவினருக்கு சசிகலா அழைப்பு

கடந்த ஆண்டைவிட இந்தாண்டு ஆமைகளின் எண்ணிக்கை 2.15 லட்சமாக அதிகரிப்பு: தமிழக வனத்துறை சாதனை