வாஷிங் மிஷினில் கடத்திய ரூ.1.30 கோடி பறிமுதல்: விசாகப்பட்டினத்தில் பரபரப்பு

திருமலை: விசாகப்பட்டினத்தில் வாஷிங் மிஷினில் கடத்திய ரூ.1.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சரக்கு ஆட்டோவில் புதிய வாஷிங் மிஷன்கள் கொண்டு செல்வதை பார்த்த போலீசார் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 6 வாஷிங் மிஷின்கள் புதிதாக ‘சீல்’ பிரிக்காமல் காணப்பட்டது. இதுகுறித்து போலீசார் டிரைவரிடம் விசாரணை செய்தனர். இதில், விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா கொண்டு செல்வதாக கூறினார். விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு வாஷிங் மெஷின்கள் ஆட்டோவில் கொண்டு செல்லப்படுமா?, என சந்தேகமடைந்த போலீசார் 6 வாஷிங் மிஷன்களையும் கீழே இறக்கி சோதனை செய்தனர். இதில், ரூ.1.30 கோடி ரொக்கம், 30 புதிய செல்போன்கள் இருந்தது தெரியவந்தது. அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு