ஸ்கோடா அனிவர்சரி எடிஷன்கள்

இந்தியாவிலும் பின்னர் உலகின் பிற நாடுகளிலும் ஸ்கோடா ஸ்லாவியா செடான் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமான ஓராண்டை நிறைவு செய்துள்ளது. குஷக் ஜூலை 2021 இல் முதலில் அறிமுகமானது. ஸ்லாவியா மார்ச் 2022 இல் அறிமுகமானது. இதைக் குறிக்கும் வகையில், இந்த நிறுவனம் ஸ்லாவியா செடானின் புத்தம் புதிய ஆண்டுவிழா பதிப்புகளை (அனிவர்சரி எடிஷன்கள்) அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டுமே 5 நட்சத்திர பாதுகாப்பு தர சான்றிதழைப் பெற்றுள்ளன. ஸ்கோடா ஸ்லாவியாவில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் உள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.

ஷோரூம் விலையாக ஸ்லாவியா மேனுவல் டிரான்ஸ் மிஷன் சுமார் ரூ.17.27 லட்சம் எனவும், ஆட்டோமேட்டிக் சுமார் ரூ.18.67 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் குஷக் புளூ எடிஷனிலும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இதில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் சுமார் ரூ.17.99 லட்சம் எனவும், ஆட்டோமேட்டிக் சுமார் ரூ.19.19 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவை புதிய மாசு தர கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த இன்ஜின்கள் அதிகபட்சமாக 110 கிலோவாட் பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். வாகனத்தில் முழு சுமை இல்லாதபோது, இன்ஜினில் 4 சிலிண்டர்களில் 2 சிலிண்டர்கள் மட்டும் செயல்பட்டு எரிபொருள் திறனை மேம்படுததுகிறது. அனிவர்சரி எடிஷன் பேட்ச்கள், கிரில் மற்றும் கதவின் கீழ் பகுதிகளிலும் குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. முதன்மையான பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

Related posts

தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

விராலிமலையில் பட்டாசு கிடங்கில் நடந்த வெடிவிபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மேலூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து மூதாட்டி பலி; 2 பேர் படுகாயம்