சிசோடியா நீதிமன்ற காவல் 30ம் தேதி வரை நீடிப்பு

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்தாண்டு பிப். 26ம் தேதி கைது செய்தது. இதையடுத்து அவர் தற்போது நீதிமன்ற காவலின் அடிப்படையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மணீஷ் சிசோடியா நேற்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவிரி பவிஜா முன்னிலையில் காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது நீதிமன்ற காவல் வரும் 30ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது.

Related posts

வங்கதேச அணிக்கு எதிராக வெற்றிபெற்றது அதிர்ஷ்டவசமானது: தென்ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பேட்டி

இது மோடி 3.0 என்று சிலர் வர்ணிக்கிறார்கள், ஆனால் இது மோடி 2.1 போன்று தெரிகிறது :ப.சிதம்பரம்

தமிழ் மொழி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!